ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை.. மீறினால் பறிமுதல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை.. மீறினால் பறிமுதல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போனுக்கு தடை

திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போனுக்கு தடை

Cell phone banned | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல் போன் கொண்ட செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். இது குறித்து ஒரு வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியுட வேண்டும் என்றும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள், பக்தர்கள் செல் போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த சீதாராமன் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

  இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயணா பிரசாத் அமர்வு வழங்கிய தீர்ப்பில், ” வழிபாட்டுக்கு உரிய கோவில்கள் என்ன சத்திராமா? கோவில்கள் பொழுது போக்கும் சுற்றுலா தலம் அல்ல. கோவில்களுக்கு வரும் பக்தர்கள், டவுசர், அரைகால் சட்டை, ஜீன்ஸ் பேன்ட், உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வருவது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

  Also see... அரை கிலோ தங்கம்.. 5 கிலோ வெள்ளி.. திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை!

  இதேபோலவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Banned, Mobile phone, Thiruchendur