தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கப்பட்டு முதல் நாள் இரவு பென்னிக்ஸூம் இரண்டாம் நாள் காலை தந்தை ஜெயராஜ்-ம் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் 10 போலீசாரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 3 சொகுசு வாகனங்கள் மற்றும் ஒரு வஜ்ரா வாகனத்தில் வந்த சிபிஐ அதிகாரிகள், காவல் நிலையத்திற்குள் சென்று சீல் வைக்கப்பட்ட எஸ்.ஐ.ரகு கணேஷின் அறையில் இருந்த சீலை அகற்றி அதில் இருந்த வழக்கு சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர டேபிளையும் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் அதையும் கொண்டு சென்றனர். சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, பெரிய வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் - பி.முரளிகணேஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBI, Double Murdered, Murder case, Sathankulam, Thoothukudi