தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி என்பவர் அப்பள்ளி மாணவருடன் சாதி தொடர்பாக பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆசிரியை கலைச்செல்வி. இவர் அந்த பள்ளியில் பயிலும் முனீஸ்வரன் என்ற மாணவரிடம் செல்போனில் பேசியதாக கூறி வெளியாகி உள்ள ஆடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், மாணவனிடம் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரை சொல்லி இவர்களை பிடிக்குமா என்று கேட்க, அந்த மாணவரும் ஆசிரியர்களை பிடிக்கும் என்று சொல்ல தொடர்ந்து உரையாடல் நடைபெறுகிறது.
அதில் மாணவரின் ஊரான புளிங்குளத்தினை சேர்ந்தவர்களை சில ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என்று கூறுவதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த ஆசிரியர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் அவர்கள் கையில் சென்று விடும் என்ற தொனியில் மாணவரிடம் அந்த ஆசிரியை பேசுகிறார்.
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் மாணவரின் ஊரைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்றும், சில ஆசிரியர்கள் சரியாக இருப்பதில்லை என்பது போன்ற உரையாடல் தொடர்கிறது. பள்ளியில் நடைபெறவுள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலுக்காக மாணவரிடம் இந்த உரையாடல் நடத்தப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சம்பந்த பட்ட உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்விடம் கேட்ட போது, “அது தனது ஆடியோ இல்லை, எடிட் செய்துள்ளனர், தான் நல்ல முறையில் பாடம் நடத்துவேன், மாணவர்கள் என்ன சாதி என்று கூட தெரியாது, மாணவர்களிடம் கண்டிப்பாக இருப்பேன், தன்னை பிடிக்காதவர்கள் இது போன்று செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசிரியை பணியிடை நீக்கம்
இந்நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தினால் உண்மை தெரிய வரும். அனைவரும் சமம் என்பதனை கற்பிக்க வேண்டி ஆசிரியர் சாதி குறித்து பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Must Read : ஒற்றைத் தலைமை செயல்வடிவம் பெறலாம்.. பெறாமலும் போகலாம்- ஜெயக்குமார் திடீர் பல்டி
அது மட்டுமின்றி அந்த ஆடியோவின் உரையாடல் இரு வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே மோதல்களை உருவாக்கும் வகையில் துண்டி விடப்படுவது போல் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி , உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியை மீனா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.