முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ’ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும்’ - போனில் வந்த மிரட்டலால் தூத்துக்குடியில் பரபரப்பு

’ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும்’ - போனில் வந்த மிரட்டலால் தூத்துக்குடியில் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த ஆத்தூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் தொலைபேசியில் நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது, முத்துநகர் விரைவு ரயில் சென்னை புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசாரும் சேர்ந்து வெடிகுண்டை தேடினார்கள்.

மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். போனில் பேசிய அந்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்க்கால் கிராமத்தில் இருந்து அந்த போன் வந்தது தெரியவந்தது.

உடனடியாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று போனில் பேசிய மணி மகன் கணேசமூர்த்தி (42) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில்   மதுபோதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Also see... நாளை மறுதினம் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. காவல் துறை விடுத்த எச்சரிக்கை..!

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே 8.15க்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது குறிப்ப்டத்தக்கது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

First published:

Tags: Bomb, Thoothukodi, Train