ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

சசிகலா புஷ்பா வீடு கார் மீது தாக்குதல்.. மர்மநபர்களை தேடும் போலீஸ்

சசிகலா புஷ்பா வீடு கார் மீது தாக்குதல்.. மர்மநபர்களை தேடும் போலீஸ்

சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்

சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்

தூத்துக்குடி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் எம்பியும் தற்போதைய பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவின் வீடு உள்ளது. இன்று இவர் நாகர்கோவில் சென்று இருந்ததால் இவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 5 நபர்கள் சசிகலா புஷ்பாவின் பூட்டிய வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மற்றும் வீட்டில் உள்ள பூந்தொட்டி, வீட்டின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி விட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சசிகலா புஷ்பாவின் வீட்டு முன்பு திரண்ட பாஜகவினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  திமுக குண்டர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: அண்ணாமலை இருக்கும் மேடையில் ஏறுவீர்களா.. ஏறினால் கால் இருக்காது - சசிகலா புஷ்பா பேச்சால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர் கீதா ஜீவன் முதல்வர் மற்றும் அமைச்சர்களை பற்றி பேசுவதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் இருக்கும் மேடை ஏறுவோம் என்று திமுக பொதுகூட்டத்தில் பேசி இருந்தார்.

இதனைத தொடர்ந்து நேற்று இரவு தூத்துக்குடியில் பாஜக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசும் போது எங்கள் தலைவர் இருக்கும் மேடை ஏறுவீர்களா? முடிந்தால் ஏறிப் பாருங்கள்! நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது. அண்ணாமலை பற்றி பேசினால் நாக்கு இருக்காது.  என்று பேசினார். இந்தநிலையில் இன்று சசிகலா புஷ்பா வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் அவரது கார் கண்ணாடி மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ் (தூத்துக்குடி)

First published:

Tags: Attack, BJP, Local News, Sasikala Pushpa, Tamil News