முகப்பு /செய்தி /தூத்துக்குடி / காங்கிரஸூம் கமலும்.. ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஃபார்முலாதான் - எச்.ராஜா கருத்து

காங்கிரஸூம் கமலும்.. ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஃபார்முலாதான் - எச்.ராஜா கருத்து

எச்.ராஜா - கமல் ஹாசன்

எச்.ராஜா - கமல் ஹாசன்

HRaja : இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் ஆதரவு என்பது ஜீரோ ப்ளஸ் ஜீரோதான் என்ற கணித முறைப்படி அமையும்  என பாஜக எச். ராஜா விமர்சித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Also Read:  தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா விமர்சனம்

தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள் இதனால் மக்கள் திமுக பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள். எனவே எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரிய வேண்டும்.

இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு என கமல் ஹாசன் தெரிவித்ததை பற்றி தெரிவித்த அவர்,காங்கிரஸ்-க்கு கமல்ஹாசனின் ஆதரவு குழப்பத்தைதான் தரும். ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ தான் என்ற கணித முறைப்படி தான் கமல் ஹாசனின் ஆதரவு அமையும் என கருத்து தெரிவித்தார். மேலும் ஆளுநருடன் திமுக சண்டையிட்டால் 2024-ல் ஜனவரியில் உதயசூரியன் உதிக்காது என தெரிவித்தார்.

செய்தியாளர்: முரளிகணேஷ் ( தூத்துக்குடி)

First published:

Tags: BJP, Congress, HRaja, Kamal Haasan, Local News, Tamil News