Home /News /thoothukudi /

தூத்துக்குடி அருகே நெடுஞ்சாலை எச்சரிக்கை தடுப்புகளை பெயர்த்து நூதன திருட்டு.. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னனி என்ன?

தூத்துக்குடி அருகே நெடுஞ்சாலை எச்சரிக்கை தடுப்புகளை பெயர்த்து நூதன திருட்டு.. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னனி என்ன?

தூத்துக்குடி அருகே நெடுஞ்சாலை எச்சரிக்கை தடுப்புகளை பெயர்த்து நூதன திருட்டு

தூத்துக்குடி அருகே நெடுஞ்சாலை எச்சரிக்கை தடுப்புகளை பெயர்த்து நூதன திருட்டு

நெடுஞ்சாலையில் இருந்த இரும்பு அறிவிப்பு பலகைகள் பெயர்த்து திருடப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே நெடுஞ்சாலை எச்சரிக்கை தடுப்புகளை பெயர்த்து திருடிவந்த நூதன திருட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். திடுக்கிடும் திருட்டு சம்பவத்தின் பின்னணி என்ன?

    தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் - தூத்துக்குடி நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால், சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்காக சாலைகளின் இருபுறங்களிலும் பிரதிபலிப்பு பலகைகள், பெயர்பலகைகள், போன்றவை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையில் விளாத்திக்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் - மீனாட்சிபுரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்த இரும்பு அறிவிப்பு பலகைகள் பெயர்த்து திருடப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நெடுஞ்சாலைகளில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர்.

    சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல், இருளாக இருக்கும் நேரத்தில் சிலர் அறிவிப்பு பலகைகளை திருடிச்செல்வது தெரிந்தது. காட்சிகளில் தெரிந்த வாகன பதிவு எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் ஜேம்ஸ் என்பவரை போலீசார் பிடித்தனர்.

    அவர் கடையில் நடத்திய சோதனையில் நெடுஞ்சாலை தடுப்புகள், பிரதிபலிப்பு பலகைகள் ஏராளமாக இருந்துள்ளது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பர்கள் கருப்புசாமி, மற்றும் ஆத்தி என்பவருடன் சேர்ந்து தடுப்புகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

    மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டிற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ, திருடிய பெயர் பலகைகள் போன்றவற்றையும் போலீசார் மீட்டனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tuticorin

    அடுத்த செய்தி