முகப்பு /செய்தி /தூத்துக்குடி / பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை.. எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - அர்ஜுன் சம்பத்

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை.. எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - அர்ஜுன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

Thoothukkudi | ஆர்.எஸ்.எஸ். சட்டபூர்வமான இயக்கம் ஒரு கட்டுப்பாடான, ஒழுக்கமான, சேவை இயக்கம் எனவே இந்த இயக்கம் குறித்து அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை ஒட்டி காளி வேடம் அணிந்த பக்தர்களின் ஊர்வலத்தை  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாரத நாடு முழுவதும் நவராத்திரி தசரா கொண்டாட்டம் சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்களுடைய மாபெரும் திருவிழா இந்த தசரா திருவிழா, தென் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து இந்த தசரா திருவிழாவில் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

இன்றைக்கு நம்முடைய நாட்டிற்கு பாதுகாப்பு தேவை, நம்முடைய பாரதம் தேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் நம்முடைய ஆயுதங்களை எல்லாம் தன்னுடைய கையிலே வைத்திருக்கக்கூடிய பாரதத்தாய் மகா காளி, பராசக்தி, நவராத்திரியாகும். விஜயதசமி நாளில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட நாட்களை கொண்டாடும் விதமாகவும், அக்டோபர் 2-ம் தேதி காந்திக்கு மரியாதை செலுத்தக் கூடிய வகையிலும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தக் கூடிய வகையிலும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற இருக்கிறது.

மூன்று முறை ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. மூன்று முறையும் யார் தடை செய்தார்களோ அவர்களே அந்த தடையை விலக்கிக் கொண்டார்கள். இது ஒரு சட்டபூர்வமான இயக்கம் ஒரு கட்டுப்பாடான, ஒழுக்கமான, சேவை இயக்கம் எனவே இந்த இயக்கம் குறித்து அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு காளி ஊர்வலம் நடத்துகின்ற முக்கியமான நோக்கம் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (PFI) தடை செய்யப்பட்டது. இது எங்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி, அதோடு மட்டுமல்ல தேச விரோத, வன்முறை தீவிரவாதம் தடுக்க பட வேண்டும் என்று சொன்னால் தொழில் வளம், வாழ்வாதாரம் பெறுக வேண்டும் என்று சொன்னால் மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், கூடங்குளம் போராட்ட குழு இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. இவர்களும் தமிழக அரசின் வளர்ச்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். ஆகவே இதை தடை செய்ய வேண்டும்.

தூத்துக்குடியில் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். தென்மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மின்சார உற்பத்தி, சாலை அமைத்தல், பாலங்கள் கட்டுதல், தொழில் வளர்ச்சி வர வேண்டும். குலசை முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தர இருக்கிறார்கள். விரதம் இருந்து வருகிறார்கள்.

முத்தாரம்மன் கோவிலில் தரிசனம் செய்ய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பக்தர்களுக்கு பல்வேறு நெருக்கடி கொடுக்கிறார்கள். விழாவை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு கொடுப்பதற்கும் தமிழக அரசாங்கம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறநிலையத்துறைக்கும் கடமை உண்டு. அந்த கடமை அவர்கள் செவ்வனே செய்து சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “ ராக்கெட் ஏவுதளம் இந்தியாவின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள்  வேண்டுமென்று உள்நோக்கத்தோடு மக்கள் அதிகாரம், கூடங்குளம் போராட்டக்குழு, இங்கு இருக்கக்கூடிய சர்ச்சுகள் இந்தியா வல்லரசு ஆவதை எதிர்க்கிறார்கள்.  மக்களை சிலர்  தூண்டிவிடுகிறார்கள். இதனை முறியடித்து அந்த இடத்திலே ராக்கெட் ஏவுதளம் அமைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. சென்னையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பாணியை கடைபிடித்து அதேபோல எட்டுவழிச்சாலைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆகவே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, இந்த விமான நிலைய விரிவாக்க எதிர்ப்புப் போராட்ட குழு, வளர்ச்சிக்கு எதிரான போராட்டக் குழு இவர்களெல்லாம் தடை செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்று கூறினார்.

top videos

    செய்தியாளர்:  பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

    First published:

    Tags: Arjun Sampath, RSS, Thoothukudi