ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி மாணவர் மீது தாக்குதல் - 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு.. கோவில்பட்டியில் பரபரப்பு

பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி மாணவர் மீது தாக்குதல் - 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு.. கோவில்பட்டியில் பரபரப்பு

பாதிக்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன்

பாதிக்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன்

மாணவரை தாக்கும் போது எந்த ஆசிரியரும் தடுக்கவில்லை மாறாக வெளிய வைத்து அடித்துக் கொள்ளுங்கள் என்று ஆசிரியர் கூறியதாக மாணவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது தாக்குதல் நடத்திய 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவியும் அந்த பள்ளியில் பயின்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் வகுப்பில் அச்சிறுவன் மாணவி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இதையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்‌. இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் தாயார், மற்றொரு பெண் சேர்ந்து பள்ளி வகுப்புறைக்குள் புகுந்து அந்த சிறுவனை செருப்பால் அடித்து தாக்கியதாகவும், ஜாதி பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.  காயம் அடைந்த அந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் பிரச்சனை தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவருடன் வந்த பெண்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ்யிடம் மனு அளித்துள்ளனர். வகுப்புறைக்குள் தாக்குதல் நடத்திய போது ஆசிரியர்கள் தடுக்கவில்லை வெளியே சென்று அடிக்க சென்னதாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடனை கட்டாததால் ஏலம் போன மதுவந்தியின் வீடு.. ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம் என பரபரப்பு புகார்

இது குறித்து கூறிய, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மாணவரை ஜாதி ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும், தாக்குதல் நடத்தியது தொடர்பாக அந்த வகுப்பு ஆசிரியர் மூலமாக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாணவரை தாக்கும் போது எந்த ஆசிரியரும் தடுக்கவில்லை மாறாக வெளிய வைத்து அடித்துக் கொள்ளுங்கள் என்று மாணவர் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதும் பள்ளி தலைமையாசிரியர் சரியான முறையில் கையாளவில்லை என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

First published:

Tags: Kovilpatti