ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருநங்கைகளின் முடியை அறுத்த விவகாரம்.. பேச மறுத்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக வாக்குமூலம்..!

திருநங்கைகளின் முடியை அறுத்த விவகாரம்.. பேச மறுத்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக வாக்குமூலம்..!

முடியை வெட்டிய சம்பவம்

முடியை வெட்டிய சம்பவம்

இருவருக்கும், திருநங்கை அனன்யாவுக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தததாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi | Thoothukkudi (Thoothukudi) | Tamil Nadu

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், திருநங்கை பேச மறுத்ததால் ஆத்திரத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, மகேஷ் ஆகிய இருவரையும் காட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் இருவர் முடியை அறுத்து தாக்குல் நடத்திய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய  நோவாயூபன் மற்றும் விஜய் என்பவரை கழுகுமலை போலீசார் கைது செய்தனர்.

  தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நோவா மற்றும் விஜய் ஆகியோருக்கும், திருநங்கை அனன்யாவுக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அனன்யா இருவரிடமும் பேச மறுத்து வந்தார்.

  இதையும் படிங்க | பாஜக பிரமுகர் வாங்கிய லோன்.. தமிழிசை போட்டோவை ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் கும்பல் அட்டூழியம்

  இதனால் ஆத்திரமடைந்த இவர்கள், அனன்யாவுக்கு பேச சொல்லி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதற்கு அனன்யா போலீசிடம் புகார் அளித்துவிடுவேன் என கூறியதால், ஆத்திரத்தில் அவரை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். இருவரும் அழகாக இருப்பதால் தான் பேச மறுக்கிறார்கள், இதனால் அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக முடியை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Attack, Crime News, Thoothukudi, Transgender