ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கோவில்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு அணிந்து காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு அணிந்து காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Kovilpatti | அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kovilpatti, India

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு தற்காலிகமாக பணி நியமிக்கப்பட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சம்மேளனம் சார்பில் தலையில் முக்காடு அணிந்தபடி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த போராட்டத்திற்கு, வட்டாரத் தலைவர் மகேஷ்வரி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வ வடிவு ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர். 

  Also see... ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

  கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kovilpatti, Protest