Home /News /thoothukudi /

'தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம்' - ஓ.பி.எஸ் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..  

'தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம்' - ஓ.பி.எஸ் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..  

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

Udhayakumar on OPS : 'ஓ.பி.எஸ் எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போது எல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார்' - ஆர்.பி.உதயகுமார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti | Thoothukkudi (Thoothukudi) | Tamil Nadu
ஓபிஎஸ் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம் என்றும், விலாசத்தினை தொலைத்தவர்கள் தான் ஓ.பி.எஸ் பக்கம் செல்கின்றனர் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கௌரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

இதையெடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவி ஏற்றார். பின்னர் ராஜினாமா செய்தார். பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் திமுகவுடன் இணைந்து சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ் மௌன யுத்தம் நடத்தினார். இதனால் அதிமுக செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது. சட்டமன்ற தேர்தலின் போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓ.பி.எஸ்.செல்லவில்லை எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வரும் போது வழக்கம் போல ஓ.பி.எஸ். மௌன யுத்தத்தினை தொடங்கினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்


எந்த தியாகத்தினையும் செய்யாதவருக்கு தலைவர் பதவி எதற்கு என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கின்றனர். எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போது எல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஓ.பி.எஸ் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல. அது துரோக யுத்தம் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர். காலாவதியானவர்கள், காணாமல் போனவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ் பதவிகள் வழங்கி வந்தார். நீதிமன்ற தீர்ப்பினால் அதுவும் போய்விட்டது.

ALSO READ | 4308 காலி மருத்துவ பணியிடங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓபிஎஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தத்தினை நடத்துவார். அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஓபிஎஸ்க்கு வெற்றி தராது. பல வதந்திகளை உருவாக்கி வருகிறார். விலாசத்தினை தொலைத்தவர்கள் தான் ஓ.பி.எஸ் பக்கம் செல்கின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது என்றார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: ADMK, O Panneerselvam, R.B.Udhayakumar

அடுத்த செய்தி