முகப்பு /செய்தி /தூத்துக்குடி / பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

அதிமுக ஆர்பாட்டம்

அதிமுக ஆர்பாட்டம்

ADMK -BJP Fight | தொடர்ந்து அதிமுக -பாஜகவில் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜகவினரை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி  சார்பில்  அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில்  போராட்டம் நடந்தது. கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது

அபோது எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும், கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலக முன்பு அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிஎஸ்பி வெங்கடேஸ்சிடம் புகார் மனுவையும் அளித்தனர்.

First published:

Tags: ADMK, Annamalai, BJP, EPS