தூத்துக்குடி கோட்டத்தில் வனவராக பணிபுரியும் சுப்புராஜ், வனவராக பணிபுரிந்து கொண்டே IFS தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 57-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி-முனியம்மாள் தம்பதியர். வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்த குருசாமி அங்கிருந்து சொந்த கிராமத்திற்கு வந்து பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். அதில், மூத்த மகன் சுப்புராஜ் (27) இவர் கடையநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் ஹிதாயத் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். 1200க்கு 1088 மதிப்பெண்கள் பெற்ற அவர் பள்ளி படிப்பின்போது ஏரோனாட்டிக்கல் என்ஜினீயர் ஆக வேண்டும் என்று எண்ணத்தை கொண்டுள்ளார்.
கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 4 ஆண்டுகள் படித்துவிட்டு கடந்த 2016-ம் ஆண்டு சுப்புராஜ் சென்னைக்கு சென்றார். யுபிஎஸ்சி தேர்வுகள் குறித்து சக நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட அவர் அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்பியுள்ளார். சென்னையில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். 2017ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் பிரிமினரி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் முதன்மை (main) தேர்வில் வெற்றி பெற முடியவில்லை 2018ம் ஆண்டு பிரிலிமினரி தேர்விலேயே தோல்வியடைந்தார். 4 ஆண்டுகள் தொடர் முயற்சிக்கு பிறகும் வெற்றி பெற முடியாததால் அங்கு வேறு வழியின்றி வேறி வேலைக்கு செல்ல முடிவெடுத்து 2019ம் ஆண்டு வனத்துறை தேர்வு எழுதி வனவராக பணியில் சேர்ந்தார்.
எனினும் தனது யுபிஎஸ்சி கனவை அவர் கைவிடவில்லை சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வாணையத்தில் 2 ஆண்டுகள் படித்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார். தற்போது அங்கேயே பணி செய்து வருகிறார்.
ஆனாலும் அதே , ஐஏஎஸ் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார்..இதற்காக ஏற்கனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6-வது முறையாக சமீபத்தில் தேர்வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார். ஐ. ஏ.எஸ் , ஐஎப்எஸ் என இரு முதன்மை தேர்வு களிலும் வெற்றி பெற்று நேர் காணலுக்காக டெல்லி சென்று முதலில் IAS நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை மனமுடைந்த அவர் மீண்டும் Ifs நேர்காணலில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். எனினும் IAS ல் வெற்றி பெறுவதே தனது லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் அதற்காக தொடர்ந்து தயாராகி வருகிறார்.
அவர் கூறுகையில், நான் கடையநல்லூர் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,088 மதிப்பெண்கள் பெற்றேன். விமானத்துறையில் சேர்வதற்காக கோவையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன்.
ஆனால் அதன்பின்னரே வனத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதை அறிந்து அந்த பணியில் சேர என்னை தயார்படுத்திக்கொண்டேன். இதற்காக கடுமையாக உழைத்து நான் வெற்றி பெற்றுள்ளேன்.
வனவராக வெற்றி பெற்ற பின்னரும், எனக்கு ஆசை விடவில்லை. எனக்கு மேல் உள்ள அதிகாரிகளை பார்க்கும்போதெல்லாம் அவர்களை போன்று உயரவேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே இருந்தது.
இதனால் வனப்பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே உயர் பதவிக்கு படித்து வந்தேன். கடுமையான வேலைக்கு நடுவிலும் தினமும் இரவில் உட்கார்ந்து படிப்பேன். அதன் மூலமாக 6-வது முயற்சியில் நான் வெற்றி பெற்று தற்போது வனத்துறை அதிகாரியாகி உள்ளேன்.
என்னுடன் சேர்த்து மொத்தம் 108 பேர் தேர்ச்சி அடைந்துள்ளோம். இதில் நான் அகில இந்திய அளவில் 57-வது இடத்தை பிடித்துள்ளேன்.
என்றார். தற்போது சென்னையில் IFS பணி யானை பெரும் முயற்சியில் இருக்கும் நிலையில் IAS தேர்வில் வெற்றி பெறுவதையே இலட்சியமாக கொண்டு அதற்கும் தயாராகி வருகிறார்.
வசதி வாய்ப்புகள் இல்லாததாது வெற்றிக்கு ஒரு தடையல்ல என்பதை சுப்புராஜ் நிருபித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.