முகப்பு /செய்தி /தூத்துக்குடி / பள்ளி பாத்ரூமில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை - ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு - உடலை வாங்க மறுப்பு

பள்ளி பாத்ரூமில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை - ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு - உடலை வாங்க மறுப்பு

பெற்றோர்கள் போராட்டம்

பெற்றோர்கள் போராட்டம்

மகளின் உயிரிழப்பிற்கு ஆசிரியர்களே காரணம் என்றும், காவல்துறையினர் கையெழுத்து கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti | Thoothukkudi (Thoothukudi)

கோவில்பட்டி அருகே பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மகளின் தற்கொலைக்கு ஆசிரியர்களே காரணம் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியிலேயே தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பள்ளி கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த இவரை கண்ட சக மாணவிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், உயிரிழந்த மாணவி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தனது ஊரில் சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பியதாகவும், அப்போது இருந்து யாரிடமும், சரிவர பேசமால் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ | சாலையில் டேபிள் போட்டு சீயர்ஸ் அடிக்கும் குடிமகன்கள்..! - டாஸ்மாக் பார் ஊழியர்களின் துணையுடன் அத்துமீறல்

இந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மகளின் உயிரிழப்பிற்கு ஆசிரியர்களே காரணம் என்றும், காவல்துறையினர் கையெழுத்து கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பள்ளி வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து திட்டுவதாக மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்ததாகவும், இந்த ஆண்டோடு பள்ளி முடிந்துவிடும் பொறுத்து கொள் என மகளிடம் அறிவுரை வழங்கியதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Kovilpatti, Student Suicide, Sucide