Home /News /thoothukudi /

பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை- விடுதியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை- விடுதியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம்

பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம்

மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India
கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி மாணவி தங்கியிருந்த விடுதியை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும்  மேல்நிலைப் பள்ளி கழிவறையில் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். . தகவல் அறிந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.. சேலத்தில் துயர சம்பவம்

இந்த நிலையில், மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவி உயிரிழந்த அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Kovilpatti, Student Suicide, Suicide

அடுத்த செய்தி