Home /News /thoothukudi /

பள்ளி கழிவறையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி கழிவறையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

Crime News: மாணவியின் அறையில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi | Kovilpatti | Tamil Nadu
கோவில்பட்டி அருகே பள்ளி கழிவறையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியிலேயே தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பள்ளி கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த இவரை கண்ட சக மாணவிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | கனியாமூர் பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல்

விசாரணையில், உயிரிழந்த மாணவி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தனது ஊரில் சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பியதாகவும், அப்போது இருந்து யாரிடமும், சரிவர பேசமால் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சக மாணவிகளிடம் பேசும் போடு மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் அறையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் ஸ்ரீராமஜெயம் என எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Kovilpatti, Student Suicide, Suicide

அடுத்த செய்தி