Home /News /thoothukudi /

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்திய 400 கிலோ கஞ்சா பறிமுதல்... 10 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்திய 400 கிலோ கஞ்சா பறிமுதல்... 10 பேர் கைது

கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

Thoothukkudi | இலங்கைக்கு 400 கிலோ கஞ்சா கடத்தி சென்று பிடிபட்டவர்கள் தூத்துக்குடி அருகே கடல் பகுதியில் இருந்து கடத்தி சென்றது அதிகாரிகள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் நமது கடற்கரை பகுதிகளிலேயே பிடிபட்டு விடுகின்றனர். பலர் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபடுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று போதைப் பொருள் கடத்திச் சென்று இலங்கையில்   பிடிபட்டவர்கள் 13  பேர். இவர்கள்  இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இலங்கை அருகே கல்பிட்டியா துறைமுகத்தில் கடலில் சென்ற ஒரு தமிழக  மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது  அந்தப் படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அந்தப் படகில்  10 மூடைகளில் இருந்த 400 கிலோ கஞ்சாவை படகுடன் பறிமுதல் செய்த கடற்படையினர் இதை கடத்திச் சென்ற 5 பேரையும் அவற்றை கடலில் வாங்கி செல்ல வந்திருந்த இலங்கை புத்தளத்தை சேர்ந்த 5 பேரையும்  கைது செய்துள்ளனர்.

    இதில் பிடிபட்ட பரலோக மாதா என்ற நாட்டு படகு தங்கச்சிமடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கஞ்சாவை கடத்தி சென்று பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சூசையப்பர் பட்டிணம் ரிக்சன், கிறிஸ்டிராஜ், தங்கச்சி மடம் அந்தோணி அடிமை, கீழக்கரை இம்ரான்கான், திருப்புலனி உதயகுமார் என்பதும் தெரியவந்தது.



    மேலும் பிடிபட்ட கஞ்சாவின்  சர்வதேச மதிப்பு ரூ.20 கோடியாகும். தொடர்ந்து தமிழக பாதுகாப்புத் துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவது, பாதுகாப்புத் துறையினருக்கு சவால் விடுவது போல் அமைந்துள்ளது என்பதுடன், நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது.

    Also see... பெயிண்ட் அடிக்க வந்த இடத்தில் ரூ.10 லட்சம் திருட்டு: 3 பேர் கைது

    இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய, மாநில உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் தூத்துக்குடி மாவட்ட படகில் 400 கிலோ கஞ்சா சிக்கியது,  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cannabis, Crime News, Smuggling, Thoothukudi

    அடுத்த செய்தி