ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கோவில்பட்டி: பாலத்தில் வந்தபோது தடுமாற்றம்.. பஸ்ஸுக்குள் பாய்ந்த கார்.. 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

கோவில்பட்டி: பாலத்தில் வந்தபோது தடுமாற்றம்.. பஸ்ஸுக்குள் பாய்ந்த கார்.. 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

விபத்து

விபத்து

Kovilpatti | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பஸ் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக்(23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடித்து கீர்த்திக் தனது கல்லூரி நண்பர்களான செந்தில்குமார் (24),  அஜய் (23),  மகன் அருண்குமார் (21), விக்னேஷ் (23) ஆகியோருடன் கோவில்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகில் உள்ள பாலத்தில் வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் - கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிக் கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

Also see... திருப்பதி: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சை!

தீயணைப்பு துறையினர் உதவியுடன் இடிப்பாடுகளில் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் இன்று காலை விக்னேஷ் உயிரிழந்தார்.

அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: மகேஷ்வரன், தூத்துக்குடி

First published:

Tags: Kovilpatti, Road accident, Students killed, Thoothukodi