முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதிலாக வந்த 20 ரூபாய்... ஸ்விகி ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதிலாக வந்த 20 ரூபாய்... ஸ்விகி ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

ஏடிஎம் பிரச்னை

ஏடிஎம் பிரச்னை

ஏடிஎம் மையத்தில் 20 ரூபாய் நோட்டுக்கள் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் ஸ்விகி   ஊழியர் ஐயப்பன் தனது ஏடிஎம் கார்டு மூலம் 3,500 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.  அப்போது, ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என 3,500 ரூபாய்க்கு பதில் 3,140 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்தாக கூறப்படுகிறது.

ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

இதனால் அதிர்ச்சியடைந்த ஐயப்பன் இது தொடர்பாக  புகார் செய்ய முயன்ற போது, அந்த மையத்தில் எவ்வித தொடர்பு எண்ணும்  இல்லை. இதையடுத்து, அவர் தான் கணக்கு வைத்திருக்கும்  வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். பின்னர், இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட ஏடிஎம், மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஐயப்பனிடம்,  20 ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் வர வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும், இது குறித்து மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு நடந்திருந்தால் இன்னும் மூன்று தினங்களுக்குள் தங்களது வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

First published:

Tags: ATM services, Kovilpatti, Local News