Home /News /thoothukudi /

கோவில்பட்டியில் மது போதையில் 2 பேர் வெட்டி கொலை...  போலீசாருக்கு ஹாய் சொன்ன கொலையாளியை 14 மணிநேரத்தில்  கைது செய்த காவல்துறை...

கோவில்பட்டியில் மது போதையில் 2 பேர் வெட்டி கொலை...  போலீசாருக்கு ஹாய் சொன்ன கொலையாளியை 14 மணிநேரத்தில்  கைது செய்த காவல்துறை...

குற்றவாளி - சுப்பையா

குற்றவாளி - சுப்பையா

Thoothukkudi | மது போதையில் நள்ளிரவில் அட்டகாசம் செய்து  2 பேரை வெட்டி கொலை செய்த குற்றவாளியை 14 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கிராமம் பூதலாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவர் மனைவி ராஜாமணி(68). கணவர் இறந்த நிலையில் இரண்டு மகன்களுடன் இருந்து வந்தார். ஒருவருக்கு திருமணமாகி புதூரில் வசித்து வருகிறார். ஒரு மகன் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை அவர் இரவு பணிக்கு சென்ற நிலையில் ராஜாமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில்  திடிரென ரத்த காயங்களுடன் ராஜாமணி அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து ஓடி வந்துள்ளார். அப்போது அங்கு நின்று இருந்த தனியார் பஸ் முன்பு வந்து கீழே விழுந்து ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது பஸ்சில் தூங்கி கொண்டு இருந்த தனியார் பஸ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்த போது வெள்ளை சட்டை, வெள்ளை தலைப்பாகை அணிந்த நபர் ஒருவர் ஒரு காலை சாய்த்து, சாய்த்து நடந்து சென்றதை பார்த்துள்ளனர்.

    அந்த ஊழியர்கள் கூச்சலிடவே அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த ஊழியர்கள் காடல்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி கொண்டு இருக்கும் போது, ராஜாமணி பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமி(50) என்பவர் வீட்டின் முன்பு ரத்த கறை இருப்பதை பார்த்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது உடலில் பல வெட்டுக்களுடன் பொன்னுச்சாமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை கண்டு அதரிச்சியடைந்தனர்.

    இதையெடுத்து போலீசார் 2 உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட எஸ்.பி. பாலாஜி உத்தரவின் பெயரில் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவர் அரிவாளுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் சுப்பையாவை தேடி வந்தனர். அப்போது அவர்  மாதலாபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடலே அங்கு சென்ற போலீசார் அங்கேயே அவரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தினையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யபட்டுள்ள சுப்பையா மதுவிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதிகளவில் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. ராஜாமணியின் மகன் மில் வேலைக்கு சென்றதும், இரவில் தனியாக இருக்கும் ராஜாமணி வீட்டிற்கு சென்று கதவை தட்டுவதும், நள்ளிரவில் தண்ணீர் கேட்பது என தொடர்ந்து சுப்பையா தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து ராஜாமணி ஊர் பெரியவர்களிடம் சுப்பையா பற்றி கூறியுள்ளார். இதையெடுத்து ஊர் பெரியவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் ஆதிரமடைந்த சுப்பையா ராஜாமணியை முறைத்து பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ராஜாமணி, பொன்னுச்சாமி இருவரும் கொலை செய்யபடுவதற்கு முன்பு, ராஜாமணி வீட்டின் அருகேயுள்ள டிக்கடையில் சுப்பையா அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு ராஜாமணி, பொன்னுச்சாமி இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சுப்பையா முறைத்து பார்த்துள்ளார். இதனை பார்த்த ராஜாமணி, சுப்பையா திட்டி விட்டு வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

    இது மது போதையில் இருந்த சுப்பையாவிற்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஊரில் அனைவரும் தூங்கிய நேரத்தில் மீண்டும் மது அருந்தி விட்டு  பொன்னுச்சாமி வீட்டிற்கு சென்ற சுப்பையா அங்கு தூங்கி கொண்டு இருந்த பொன்னுச்சாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, ராஜாமணி வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். முதலில் ராஜாமணி கதவினை திறக்கமால் இருந்துள்ளார். ஆனால் தொடர்ந்து தட்டிக்கொண்டு இருந்துள்ளார் சுப்பையா. இதையெடுத்து சுப்பையாவை திட்டுவதற்காக ராஜாமணி கதவை திறந்த போது, சுப்பையா தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாமணி தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால் சுப்பையா விடமால் தூரத்தி சென்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். பின்னர் அங்கிருந்து இரவோடு இரவாக கமுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் எதுவும் தெரியதவர் போல ஊருக்கு வந்துள்ளார். மாதலாபுரம் பகுதியில் போலீசார் வருவதை பார்த்தை சுப்பையா என்ன சார் விஷேசம் ? இவ்வளவு கூட்டமாக  போலீஸ் இருக்கு என்று நக்கலாக கேட்டுள்ளார்.

    இதையெடுத்து போலீசார் சுப்பையாவை கைது செய்து தங்கள் பாணியில் விசாரணை நடத்த இருவரையும் கொலை செய்தததை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாமணி, பொன்னுச்சாமி இருவரும் தன்னை பற்றி ஊரில் அவதூறாக பேசியதாகவும், அதனால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

    Also see... ராஜபாளையத்தில் போதையில் இரவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்..

    2 பேரை கொலை செய்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் 14 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Murder, Thoothukodi

    அடுத்த செய்தி