Home /News /thoothukudi /

கோவில்பட்டி அருகே அனுமதி இல்லாமல் சரளை மண் கொண்டு சென்ற லாரி பறிமுதல்... 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே அனுமதி இல்லாமல் சரளை மண் கொண்டு சென்ற லாரி பறிமுதல்... 2 பேர் கைது

லாரி பறிமுதல் - சரள் மண் கடத்தல்

லாரி பறிமுதல் - சரள் மண் கடத்தல்

Kovilpatti | கோவில்பட்டி அருகே அனுமதி இல்லமால் சரள் கொண்டு சென்ற லாரி மற்றும் 1யூனிட் சரளை மண் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அதில் வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India
    கோவில்பட்டியில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் சரளை மண் கொண்டு சென்ற லாரி, 1யூனிட் சரளை மண் ஆகியவற்றை நாலாட்டின்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் பொன் மாடசாமி, டிரைவர் செல்லக்கனி ஆகிய 2 பேரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டாம்பட்டி பகுதியில் நாலாட்டின் புதூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்திய போது உரிய அனுமதி இல்லமால் சரளை மண் கொண்டு செல்வது தெரியவந்தது.

    மேலும் குண்டுக்கல் - சக்கை கொண்டு செல்வதாக அரசிடம் பெற்றதாக கூறப்படும் அனுமதி சீட் வைத்து இருப்பதும் தெரியவந்தது. அரசின் உரிய அனுமதி இல்லாமல் சரளை  மண் கொண்டு செல்லப்படுவது உறுதியானது. இதையெடுத்து போலீசார் 1யூனிட் சரளை மண்ணுடன் இருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    Also see... தேனியில் தோட்டப்பயிர்களுக்கு மானியம்

    மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் நாலட்டின்புதூர் கல்லூரணியை சேர்ந்த செல்லக்கனி மற்றும் லாரி உரிமையாளர் பொன் மாடசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Kovilpatti, Sand

    அடுத்த செய்தி