ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருநங்கைகளை கொடூரமாக தாக்கி கூந்தலை வெட்டிய அதிர்ச்சி சம்பவம்.. தலைமறைவான இளைஞர்கள் கைது

திருநங்கைகளை கொடூரமாக தாக்கி கூந்தலை வெட்டிய அதிர்ச்சி சம்பவம்.. தலைமறைவான இளைஞர்கள் கைது

முடியை வெட்டிய சம்பவம்

முடியை வெட்டிய சம்பவம்

தலைமறைவானஇளைஞர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti | Thoothukkudi | Tamil Nadu

கோவில்பட்டி அருகே திருநங்கைகளை பயங்கரமாக தாக்கி அவர்களின் முடியை அறுத்து வீசிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, மகேஷ் ஆகிய இருவரும் கடந்த மாதம் 7ஆம் தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் அவர்களை கடத்தி சென்று காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.

திருநங்கைகளில் முகம், கால், அறுவை சிகிச்சை செய்த இடம் என அனைத்து இடங்களிலும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது போதாது என்று திருநங்கை அனன்யாவின் முடியையும் அறுத்து வீசி எரிந்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து யாரிடம் புகார் அளிக்க கூடாது என கூறி அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த 2 திருநங்கைகளும் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைகண்ட மற்ற திருநங்கைகள் தாமாக முன் வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க | குடிபோதையில் 16வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் - வாலிபர் போக்சோவில் கைது

இந்த புகாரின் அடிப்படையிலும், வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த இரு இளைஞர்களும் கழுகுமலை மற்றும் சங்கரன் கோவிலை சேர்ந்த நோவாயூபன், விஜய் என்பதை கண்டறிந்தனர். மேலும், அவர்கள் இது போன்று பல திருநங்கைகளுக்கு இதே மாதிரி மிரட்டல் விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், நோவாயூபனை மதுரையில் ‌வைத்தும், விஜயை கோவில்பட்டியில் வைத்தும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரிடமும் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Arrest, Attack, Crime News, Kovilpatti, Transgender