ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

லிப்ட் கொடுத்த இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை - கஞ்சா போதையில் 17வயது சிறுவன் வெறிச்செயல்

லிப்ட் கொடுத்த இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை - கஞ்சா போதையில் 17வயது சிறுவன் வெறிச்செயல்

கார்த்திக் ராஜ்

கார்த்திக் ராஜ்

Thoothukkudi | விளாத்திகுளத்தில் லிப்ட் கேட்டு சென்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்த 17வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரைச் சேர்ந்த சோலையப்பன் என்பவரின் மகன் கார்த்திக் ராஜ்‌.  விளாத்திகுளத்தில் "ராஜ் ஸ்டிக்கர்ஸ்" என்ற பெயரில் ஸ்டிக்கர் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, மீரான் பாளையம் தெருவில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 17 வயது மகன் இருசக்கர வாகனத்தை மறித்து லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.

  சிறிது தூரம் சென்ற நிலையில், முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பைக் ஓட்டிச் சென்று கொண்டிருந்த கார்த்திக் ராஜை வெட்டியுள்ளார். இதனால் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கார்த்திக் ராஜ் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடி உள்ளார். இருப்பினும் விடாமல், அவரை பின்தொடர்ந்த சிறுவன் வீட்டிற்குள் சென்று கார்த்திக் ராஜை சரமாரியாக அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடிள்ளார்.

  இது குறித்து தகவலறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு கார்த்திக் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திக் ராஜா உடலை கொண்டு செல்வதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவரது உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கார்த்திக் ராஜின் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

  மேலும், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில், சம்பவ இடத்தை விளாத்திகுளம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா நேரில் சென்று பார்வையிட்டு, முன்பகை காரணமாக தான் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்.

  Also see... ஆசை காதலனுக்கு ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்த காதலி - இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 17வயது சிறுவன் மீரான் பாளையம் தெருவில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்து கார்த்திக் ராஜின் உறவினர் சம்பத் என்பவரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். அதனால் கார்த்திக் ராஜின் சகோதரர் உட்பட அவரின் உறவினர்கள் 17வயது சிறுவனை அடித்துள்ளனர்.

  ' isDesktop="true" id="828425" youtubeid="7Ql-7ASQaqk" category="thoothukudi">

  இதனால் கார்த்திக் ராஜ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கோபத்தில் இருந்த 17வயது சிறுவன் முன்பகை காரணமாக  மிகுந்த கஞ்சா போதையில் கொலை செய்யும் நோக்கில், திட்டமிட்டு லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி செல்வது போல் சென்று கார்த்திக் ராஜின் கழுத்து மற்றும் கைப்பகுதியில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: மகேஷ்வரன், தூத்துக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Murder, Thoothukodi