Home /News /thoothukudi /

மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும்... தனியார் பள்ளியை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது...

மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும்... தனியார் பள்ளியை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது...

கள்ளக்குறிச்சி பள்ளி

கள்ளக்குறிச்சி பள்ளி

தனியார் பள்ளி மாணவி  மரணத்திற்கு நீதி வேண்டும், பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். தனியார் பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
    கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி  மரணத்திற்கு நீதி வேண்டும், பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். தனியார் பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது ஆர்பாட்டத்தில், “ கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும். பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். தனியார் பள்ளியை அரசுடமையாக்க வேண்டும். தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கத்தினை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சேலம் பெரியார் பல்லைகழக வினாத்தாளில் சாதி சார்ந்த கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், “ இனவாதம் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதால் அவரை திரும்ப பெற வேண்டும் ” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்தியவர்கள் கைது


    Also see... கலைஞர் நினைவிடம் அருகே ’பேனா’ நினைவுச்சின்னம்

    பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையும் கைது செய்தனர்.

    செய்தியாளர்: மகேஷ்வரன்,கோவில்பட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kallakurichi, Thoothukudi

    அடுத்த செய்தி