முகப்பு /செய்தி /தேனி / மதுரை குடிநீர் பயன்பாட்டிற்காக வைகை அணை திறப்பு!

மதுரை குடிநீர் பயன்பாட்டிற்காக வைகை அணை திறப்பு!

வைகை அணை

வைகை அணை

Theni | இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சடைந்துள்ளனர். மேலும், அணைக்கு 1492 கடி நீர் வரத்து உள்ளது. மதுரைவாசிகளின் குடிநீர் தேவைக்காகவும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்சியாக மலை பெய்து வருவதாலும், தேனி மாவட்டத்திலும் கன மழை கொட்டியதாலும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வைகை அணை நிரம்பியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தென்மேற்கு பருவமழையினால் கடந்த மாதம் 13-ந்தேதி முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது.

வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காகவும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதைத்தவிர தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வைகை அணையில் இருந்து உபரிநீரும் திறக்கப்பட்டது. எப்போதும் 69 அடியில், நிலை நிறுத்தப்படும் வைகை அணை இந்த ஆண்டு அதன் முழு உயரமான 71 அடி வரையில் தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது.

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், வைகை அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக குறையவே இல்லை. தற்போது வைகை அணை கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் கடல் போல் காட்சி அளிக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதனைதொடர்ந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் அணையின் நீர்மட்டம் 70.62 அடியாகவே உள்ளது. அணைக்கு 1492 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 2069 கன அடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: தேனி விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மேலும் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.65 அடியாக உள்ளது. மழை ஓய்ந்த நிலையில் நீர்வரத்து 528 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

First published:

Tags: Madurai, Theni, Vaigai dam level