ஹோம் /நியூஸ் /தேனி /

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் - தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் - தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்

வைகை அணை

வைகை அணை

Theni District | மழை குறைந்ததால் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை திகழ்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக சரிந்தது.

இந்நிலையில், இதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 64.55 அடியாக இருந்தது. எனவே, பாசனத்திற்கான தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து 842 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

இதேபோல, முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக இருக்கிறது. அணைக்கு 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. நீர் இருப்பானது 7,342 மி.கன அடியாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 433.28 மி.கன அடியாகும்.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு 64 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 30 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக இருக்கிறது.

First published:

Tags: Local News, Theni, Vaigai dam level