ஹோம் /நியூஸ் /தேனி /

14 வருடங்களுக்கு பின் முழு கொள்ளவை எட்டிய வைகை அணை... ஆர்ப்பரித்து வெளியேறும் நீர்

14 வருடங்களுக்கு பின் முழு கொள்ளவை எட்டிய வைகை அணை... ஆர்ப்பரித்து வெளியேறும் நீர்

வைகை அணை

வைகை அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணை 14 வருடங்களுக்கு பின் முழு கொள்ளவை எட்டி உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் நீர்த்தேக்க கொள்ளளவு கொண்டது வைகை அணை. முல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை ஆறு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது.  தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது, கடந்த 17ஆம் தேதியன்று காலை 69அடியை எட்டியது. இதையடுத்து  தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களில் வசிக்கக்கூடிய வைகை கரையோரப் பகுதி மக்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவில் 70அடியை எட்டியதும் 7 பெரிய மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இருந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் வைகையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்பட்டது. தற்போது அணையின் முழுக்கொள்ளவான 71 அடியை வைகை எட்டியுள்ளது. இதனால்  அணையின் 7பெரிய மதகுகள் வழியாக 1,817கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது.

    Also Read : தீபாவளி விடுமுறை: 2வது நாளாக ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

    வைகை அணை கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக 69அடியில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதும், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் 70அடியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.‌ ஆனால் தற்போது 71அடிக்கும் வைகையில் தண்ணீர் தேக்கப்பட்டிருப்பது 5 மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Theni, Vaigai dam level