கார்த்திகை மாதம் பிறந்தது முதல், கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் போவிலுக்கு, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சென்று வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர்.
அவ்வாறு செல்பவர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்வது வழக்கம். இதனால், குறிப்பிட்ட இந்த நாட்களில், அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அத்துடன், ஆங்காங்கே எதிர்பாராத விதமாக சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், தற்போது தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட போலீசார், சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் பக்தர்களின் வசதிக்காக கம்பம் மெட்டு சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். அதன்படி ஜனவரி 14ஆம் தேதி வரை (சபரிமலை அய்யப்பன் கோவில் மகரஜோதிவிளக்கு தரிசனம் அடுத்தமாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது) கம்பம்மெட்டு சாலை ஒருவழிப்பாதையாக செயல்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி தேனியில் இருந்து சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள், தேனி, சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, கட்டப்பணை, வாகமன், ஏலப்பாறை, குட்டிக்காணம், பூத்துக்குலு, முண்டக்கயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக செல்ல வேண்டும்.
Must Read : கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்
அங்கிருந்து திரும்பும் வாகனங்கள் பம்மை, குட்டிக்காணல், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிபெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக தேனி வரவேண்டும். ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம், தகவல்களை தெரிவிப்பதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Traffic