ஹோம் /நியூஸ் /தேனி /

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - எப்படி செல்ல வேண்டும்?

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - எப்படி செல்ல வேண்டும்?

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

Theni District | தேனி மாவட்டம் போடியிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாலங்களை சீரமைக்கப்பவுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் தங்கராஜ், உதவி செயற்பொறியாளா் நிதிஷ்குமாா் தெரிவித்துள்ளதாவது: போடியிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாலங்களை சீரமைக்கவுள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

போடியிலிருந்து மீனாட்சிபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் 2 இடங்களில் குறுகிய பாலங்கள் உள்ளன. இவற்றை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்ட திட்டமிட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் இன்று (டிசம்பர்- 8) தொடங்குகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், இந்த சாலையை 36 நாள்களுக்கு மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. போடியிலிருந்து செல்லும் வாகனங்கள் போடி, போஜன் பார்க், தேனி தேசிய நெடுஞ்சாலை, மீ.விலக்கு வழியாக மீனாட்சிபுரம் சென்று அங்கிருந்து பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் செல்ல வேண்டும்.

Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

மேலும், இந்த மாற்றத்துக்கு போக்குவரத்து பொது மக்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Theni, Traffic