அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.
அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் என இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரியகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் கோம்பையன் தலைமையில் நகர நிர்வாகம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பின் அதிமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருபவரும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Must Read : முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவை இரண்டு துண்டாக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து திரிபவர்களை வன்மையாக கண்டித்தும், பெரியகுளம் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் - பழனிகுமார், தேனி.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.