Home /News /theni /

திமுக மாவட்ட செயலர் தங்கத்தமிழ்செல்வனுக்கு எதிராக தேனியில் பரபரக்கும் போஸ்டர்கள்

திமுக மாவட்ட செயலர் தங்கத்தமிழ்செல்வனுக்கு எதிராக தேனியில் பரபரக்கும் போஸ்டர்கள்

தங்க தமிழ்செல்வனுக்கு எதிரான போஸ்டர்ஸ்

தங்க தமிழ்செல்வனுக்கு எதிரான போஸ்டர்ஸ்

போடியில் திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை கண்டித்து  கிராம மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போ.மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம், பொட்டல்களம் மற்றும் துரைராஜபுரம் காலணி. மீனாட்சிபுரம் பேரூர் செயலாளராக உள்ள பேபி குருசாமி என்பவருக்கு பதிலாக, மாற்று சமுதாயத்தை சேர்ந்த வேறோரு நபருக்கு கட்சிப் பதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.‌

    இதனால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது சமுதாயத்தினர் திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வனின் தூண்டுதலால் தான் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்நிலையில் தங்கதமிழ்செல்வனுக்கு எதிராக கண்டன சுவரொட்டியையும் ஒட்டி வருகின்றனர். 40ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாகத்திகழும் மீனாட்சிபுரம் பேரூராட்சியை அழிவுப் பாதையில் மாற்றத்துடிக்கும் தங்கத்தமிழ்செல்வனை சமுதாயம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என அச்சிடப்பட்ட சுவரொட்டி மீனாட்சிபுரம், பொட்டல்களம், துரைராஜபுரம் காலணி ஆகிய பகுதிகளில் அக்கிராம மக்கள் ஒட்டி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see... அதிமுகவை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு சென்றீர்கள்..

    செய்தியாளார்: பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thanga Tamilselvan, Theni

    அடுத்த செய்தி