முகப்பு /செய்தி /தேனி / இளம்பெண்ணுக்கு கடன் வழங்கி பாலியல் துன்புறுத்தல்... அந்தர படங்களை வைத்து மிரட்டல்... விஏஓ கைது..!

இளம்பெண்ணுக்கு கடன் வழங்கி பாலியல் துன்புறுத்தல்... அந்தர படங்களை வைத்து மிரட்டல்... விஏஓ கைது..!

கைது செய்யப்பட்ட விஏஒ

கைது செய்யப்பட்ட விஏஒ

Theni VAO Arrest In Harresment Case | பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாயை கடனாக வழங்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி ரத்தினம் நகரில் வசித்துவரும் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமாருடன், 24 வயதான பெண் ஒருவர் தட்டச்சு ஊழியராக பணியாற்றியுள்ளார். அந்த பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாயை ஜெயக்குமார் கடனாக வழங்கியுள்ளார். இதைப் பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், செல்போனில் எடுத்த படங்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் நாராயண ராஜா, தனக்கு கிடைத்த அந்தரங்க படங்களை வைத்து விஏஓ ஜெயக்குமாரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், பெண்ணின் உறவினர்களான நாராயண ராஜா, மாணிக்கம், வினோத், பாபு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Local News, Theni