Home /News /theni /

கலெக்டர் அலுவலகத்தில் 20 ஆடுகளுக்கு விடிய விடிய காவல் காத்த போலீசார்… காரணம் இதுதானாம்!!

கலெக்டர் அலுவலகத்தில் 20 ஆடுகளுக்கு விடிய விடிய காவல் காத்த போலீசார்… காரணம் இதுதானாம்!!

ஆடுகளைப் பாதுகாத்த போலீசார்

ஆடுகளைப் பாதுகாத்த போலீசார்

ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், தென்னரசு வரும் வரை ஆடுகளை பாதுகாக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • theni, India
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை முறையிட்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த உடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள், குட்டிகளுடன் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தன. அவற்றை கண்டு வியப்படைந்த அதிகாரிகள், அவை யாருக்கு சொந்தமானது என்ற விசாரணையை தொடங்கினர்.

    அப்போது, அந்த ஆடுகள் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்த அணைப்பட்டியை சேர்ந்த தென்னரசு என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பின்னர் ஒருவழியாக தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த அதிகாரிகள், அவரை தொடர்பு கொண்டு ஆடுகளை விட்டு சென்றதற்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    மக்களே உஷார்! லோன் வாங்கித் தருவதாக ஃபோன் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல்

    இதற்கு, சொத்து பிரச்னையை தீர்க்க கடந்த 2019ம் ஆண்டு முதல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ஆடுகளை ஆட்சியர் அலுவலகத்திலேயே விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து, நேரில் வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் அழைப்பு விடுத்த போதிலும், அதனை தென்னரசு மறுத்தவிட்டார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், தென்னரசு வரும் வரை ஆடுகளை பாதுகாக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பலி - சோக சம்பவம்

    இதனால், காவல்துறையினரும் விடிய விடிய ஆடுகளுக்கு காவல் காத்து வந்தனர். ஆனாலும் தென்னரசு வரவில்லை. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஆடுகளை கொண்டு சென்று நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் அடைத்தனர். புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத விரக்தியில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தனது ஆடுகளை விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    Published by:Musthak
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி