ஹோம் /நியூஸ் /தேனி /

உடல் அழுகிய நிலையில் 14 நாட்களே ஆன பெண் சிசு மீட்பு... தேனி அருகே அதிர்ச்சி!

உடல் அழுகிய நிலையில் 14 நாட்களே ஆன பெண் சிசு மீட்பு... தேனி அருகே அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Theni murder | 14 நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறி இறந்துவிட்டதால் வீட்டின் அருகே புதைத்துள்ளதாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni | Theni Allinagaram

தேனி அருகே பிறந்து 14 நாட்களான பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், வீட்டின் அருகே புதைக்கப்பட்ட சிசுவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தேவராஜ் நகர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் - ரம்யா தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி கடமலைக்குண்டு அரசு மருத்துவமனையில் ரம்யாவிற்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு சென்ற அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். அப்போது டிசம்பர் 12ஆம் தேதி அன்று குழந்தை மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்துவிட்டதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க | தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..

இதையடுத்து, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகநலத்துறை அலுவலர் சியாமளா தேவி புகார் அளித்த நிலையில், வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பெண் சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிறகு நிகழ்விடத்திலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: பழனிக்குமார், தேனி.

First published:

Tags: Crime News, Local News, Murder, Theni