ஹோம் /நியூஸ் /தேனி /

குடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. பெற்ற தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.. தேனியில் பயங்கரம்!

குடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. பெற்ற தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.. தேனியில் பயங்கரம்!

தேனி கொலை

தேனி கொலை

Theni Murder | வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பிய மகன் தினசரி குடித்து விட்டு தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனியில் மது அருந்த பணம் தர மறுத்த தாயை கோடாரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் (50) - ஜோதிலட்சுமி (45) தம்பதியினர். இவர்களுக்கு மாயாண்டி (25), மருது பாண்டி (22) மற்றும் சிவா (20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே கூலி வேலை செய்து வருகின்றனர்.

இதில் திருப்பூரில் வேலை செய்து வந்த மருதுபாண்டி மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு செல்லாமல் திருப்பூரில் இருந்து மஞ்சளாறு அணையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போதையில் அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல மது அருந்துவதற்கு தனது தாய் ஜோதி லட்சுமியிடம்,  மருதுபாண்டி பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஜோதி லட்சுமி  மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மருது பாண்டி, அருகிலிருந்த கோடாரியால் தனது  தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

ALSO READ | ரத்த வெள்ளமான வீடு.. மரண ஓலத்தில் கிராமம்.. என்ன நடந்தது?

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜோதி லட்சுமியை கண்டு அதிர்ச்சியடைந்த மருது பாண்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த ஜோதி லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ஜோதி லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து  வந்த போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மருது பாண்டியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாகதேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: பழனிக்குமார், தேனி.

First published:

Tags: Arrest, Local News, Murder, Theni