முகப்பு /செய்தி /தேனி / கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை... தேனியில் பகீர் சம்பவம்!

கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை... தேனியில் பகீர் சம்பவம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Theni Suicide | கள்ளக்காதலர்கள் ஒரே மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்க்ப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி அருகே கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (45). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3பிள்ளைகள் உள்ளனர்.‌ மகுடேஸ்வரனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அமரஜோதி (40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியார் ஆலையில் வேலை செய்து வந்த அமரஜோதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இன்று காலை அய்யனார்புரம்  அருகே உள்ள பள்ளப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் மகுடேஸ்வரன் மற்றும் அமரஜோதி இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : பழனிக்குமார், தேனி.

First published:

Tags: Crime News, Death, Illegal affair, Suicide, Theni