முகப்பு /செய்தி /தேனி / ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி.. தேனியில் பயங்கரம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி.. தேனியில் பயங்கரம்!

கிணற்றில் குதித்த குடும்பம்

கிணற்றில் குதித்த குடும்பம்

Theni suicide | ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி அருகே கிணற்றுக்குள் கைக்குழந்தை உட்பட பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி. பதறியடித்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கவே மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பொட்டிப்புரம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ்(31) - வீரமணி தம்பதியினர். ராமராஜ் விவசாயம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும், 3 வயதில் ஒரு குழந்தையும், 2 வயதில் ஒரு குழந்தையும், உள்ளனர். இந்த தம்பதியினர் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு பின்னர் இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை கண்டு பதறிபோன கிராம மக்கள் தீயணைப்புத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். கிராம மக்களே ஒன்று திரண்டு கிணற்றின் அருகே உள்ள முட்புதர்களை அகற்றி தீயணைப்புத்துறையினருக்கு உதவி வருகின்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கிணற்றில் குதித்த 5 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது.

செய்தியாளர்: பழனி, தேனி.

First published:

Tags: Local News, Suicide attempt, Theni