தமிழக - கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு ரூ.333.18 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி புறநகர் பகுதியில் தொடங்கியது.
புறவழிச்சாலை பணிகள் வத்தலகுண்டு, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறைவடைந்தது. ஆனால் தேனி புறநகர் சாலை பணிகள் இரண்டு ஆண்டுகளாக ஆமை வேதத்தில் நடைபெற்று வந்தது.
ரயில்வே மேம்பாலம் புறவழிச் சாலையை கடந்து செல்வதால் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வரை புறவழிச்சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் புறவழிச்சாலை அமைக்கும் பணி தாமதமாகவே நடைபெற்று வந்தது.
பின்னர் ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து புறவழிச் சாலை பணிகள் விரைவாக நடைபெற்றது.
இதையும் படிங்க : நாளைய முதல்வர் தளபதி விஜய்.. தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
இதற்கிடையில், சபரிமலையில் மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்கள் தேனி வழியே அதிகளவில் கடந்து சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து நகர நெரிசலை குறைப்பதற்காக தேனி புறவழிச்சாலை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் புறவழிச் சாலை மேம்பாலத்தின் அடியில் தேங்கி நின்றுள்ளது. இதனால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பாலம் ஒரு பகுதியாக கீழே இறங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தரமற்ற முறையில் கட்டப்பட்டதே புறவழிச் சாலை பாலத்தில் ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்காலிகமாக சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புறவழி சாலை பகுதியில் போக்குவரத்தை திறந்து விட்ட நிலையில் பாலத்தின் ஒரு பகுதி கீழே இறங்கியது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.