Home /News /theni /

குடும்ப சண்டை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்றவர் குத்திக்கொலை

குடும்ப சண்டை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்றவர் குத்திக்கொலை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 20நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையுடன் சிறுமி தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்த விவகாரத்தில், சைல்டு லைன் விசாரணையால் இரு குடும்பத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில்  பேச்சுவார்த்தைக்கு சென்றவர் உயிரிழந்தார்.‌ மோதல் சம்பவத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அண்ணன் - தம்பி இருவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் பொன்வண்ணன்(26). இவர் 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமடைந்த சிறுமி பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு  திருமண வயது பூர்த்தியடையாத சிறுமி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை  மருத்துவமனை நிர்வாகம் சைல்டு லைன் அமைப்புக்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து சைல்டு லைன் மற்றும் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    கடையிலிருந்த உலோக சிலைகளை திருடி, கடை உரிமையாளரிடமே விற்பனை செய்து வந்த கடை ஊழியர் கைது

    இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 20நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையுடன் சிறுமி தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று சிறுமியின் வீட்டிற்கு சென்ற பொன்வண்ணன், தாய் - சேய் இருவரையும் தனது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சைல்டு லைன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குழந்தை பிறந்த 20நாட்களே ஆன  சிறுமியை அவரது பெற்றோர் அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபமடைந்த பொன்வண்ணன், சிறுமி மற்றும் அவரது தாயாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இந்தப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிறுமியின் தந்தை கண்ணன்(50), அவரது மகன் கிஷோர்(18), உறவினர்களான போடி புதூரைச் சேர்ந்த  மனோஜ்(30), கிருஷ்ணன்(55) ஆகியோர் பொன்வண்ணனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  கண்ணன் தரப்பினருடன் பொன்வண்ணன் மற்றும் அவரது சகோதர் கார்த்திக்(30) ஆகியோர்  தகராறு செய்துள்ளனர்.அப்போது கண்ணன் மற்றும் அவருடன் வந்த 3 பேரை பொன்வண்ணன், கத்தியால் சராமரியாக குத்தியுள்ளார்.

    தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    இதில் படுகாயமடைந்த மனோஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், கண்ணன், கிஷோர், கிருஷ்ணன் ஆகிய 3 பேர் காயமடைந்து தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் பொன்வண்ணன் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Child marriage, Crime News

    அடுத்த செய்தி