Home /News /theni /

போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

இளைஞர் சடலமாக மீட்பு

இளைஞர் சடலமாக மீட்பு

Theni : போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் உயிர் தப்பிய நிலையில், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சுரேஷ் என்ற இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே ஊத்தாம்பாறை மலையில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கிய நிலையில், மூவர் கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றொரு இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஊத்தாம்பாறை மலைப்பகுதியில் நேற்று, மின்சார வாரியத்தில் தற்காலிகமாக பணியாற்றும் தேனி மற்றும் போடியைச் சேர்ந்த நபர்கள் குளிப்பதற்காக சென்றிருந்தனர்.

    கொடைக்கானல் மலையில் பெய்து வரும் கனமழையால் ஊத்தாம்பாறையில் உள்ள நீர்நிலைகளில்   திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் 4பேர் சிக்கிக் கொண்டனர். தேனி அருகே உள்ள சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (22) என்ற இளைஞர் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடிநாயக்கனூர் தீயணைப்பு வீரர்கள் போடியைச் சேர்ந்த பாண்டியராஜன் (26 ), குமரேசன்(32) போடி.சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல்( 22) ஆகிய மூவரை கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர். இரவு நேரம் ஆனதால் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நபரை மீட்கும்  பணிகள் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை மீண்டும் ஊத்தாம்பாறை பகுதியில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியைத் துவக்கினர். அப்போது, காட்டாற்று வெள்ளமும் குறைந்திருந்தது. இதனால், மீட்பு பணி தீவிரமடைந்தது. தேனி, போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200மீட்டர் தொலைவில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்  உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக குரங்கணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Must Read : ஆடு திருடிய நபரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்.. வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்

    குளிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - பழனிகுமார், தேனி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Death, Flood, Theni

    அடுத்த செய்தி