முகப்பு /செய்தி /தேனி / தேனியில் கொளுந்து விட்டு எரிந்த வாழை தோட்டம்.. தீயில் கருகிய செவ்வாழை மரங்கள்!

தேனியில் கொளுந்து விட்டு எரிந்த வாழை தோட்டம்.. தீயில் கருகிய செவ்வாழை மரங்கள்!

தீயில் கருகிய வாழை மரங்கள்

தீயில் கருகிய வாழை மரங்கள்

Theni fire accident | காய்கள் வெட்டப்பட வேண்டிய நேரத்தில் திடீரென 1,000 வாழை மரங்கள் தீயில் கருகி சாய்ந்ததால் விவசாயி சோகத்தில் ஆழ்ந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி அருகே வாழை தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் ஆயிரம் செவ்வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ் காளை. இவர் கூடலூர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் செவ்வாழை சாகுபடி செய்துள்ளார்.  இந்நிலையில் இன்று பிற்பகலில் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் வாழைமரங்கள் எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். ஆனால், அதற்குள் இந்த தீயானது வாழை தோட்டம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.‌  காய் வெட்டும் தருவாயில் இருந்த சுமார் 1000 செவ்வாழை மரங்கள் தீயில் எரிந்து சேதமானதால் விவசாயி பெருமளவில் சோகத்தில் ஆழ்ந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத்திற்கு மேல் பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த கம்பிகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர்: பழனிக்குமார், தேனி.

First published:

Tags: Banana, Fire accident, Local News, Theni