முகப்பு /செய்தி /தேனி / வகுப்பறையில் புகுந்த 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு.. மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

வகுப்பறையில் புகுந்த 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு.. மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு

வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு

Theni Snake Enter Class Room | 1 மணி நேரத்திற்கு பின் ஆய்வறையில் பதுங்கி இருந்த  சுமார் 6அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பிடிப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

ஆண்டிபட்டியில் பெண்கள் அரசுப்பள்ளியில் ஆய்வறைக்குள் கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல இயங்கி கொண்டிருந்த பள்ளியின் அறிவியல் ஆய்வறைக்குள் பாம்பு ஒன்று  புகுந்துள்ளது. அதனை கண்டு அச்சமடைந்த மாணவிகள் அலறியடித்து ஆய்வறையை விட்டு வெளியேறி  ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பள்ளிக்கு வந்த ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினர் ஆய்வறையில் இருந்த பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின் ஆய்வறையில் பதுங்கி இருந்த  சுமார் 6அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் ரக பாம்பு பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

செய்தியாளர்: பழனி குமார்

First published:

Tags: Local News, Theni