முகப்பு /செய்தி /தேனி / சீமான் பேச்சிற்கு எதிர்ப்பு: தேனியில் உருவபொம்மை எரித்து போராட்டம்!

சீமான் பேச்சிற்கு எதிர்ப்பு: தேனியில் உருவபொம்மை எரித்து போராட்டம்!

சீமான்

சீமான்

சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவபொம்மையை எரித்த தமிழ்ப் புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியின மக்கள் ஆந்திராவில் இருந்து தூய்மைப் பணிக்காக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்கள் என பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று, ஈரோடு திருநகர் காலனியில் சீமானை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சீமானை கைது செய்ய வலியுறுத்தி ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு பழைய பூந்துறை சாலையில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த தமிழ்ப்புலிகள் கட்சியினர். சீமானை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

First published:

Tags: Naam Tamilar katchi, Protest, Seeman