Home /News /theni /

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க... சிறப்பு ரோந்துக் குழு மற்றும் 24மணி நேர அலைபேசி சேவை துவக்கம்...

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க... சிறப்பு ரோந்துக் குழு மற்றும் 24மணி நேர அலைபேசி சேவை துவக்கம்...

ரேஷன் அரிசி கடத்தல்

ரேஷன் அரிசி கடத்தல்

Theni | தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு சிறப்பு ரோந்துக் குழு மற்றும் 24மணி நேர அலைபேசி சேவை துவக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தமிழகத்தில் உணவுப் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு ரோந்துக் குழு இயங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து எல்லையோர மாவட்டங்களான தேனி, கோயமுத்தூர் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் இன்று கூடுதலாக சிறப்பு ரோந்துக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அலுவலகத்தில் இந்த புதிய ரோந்து குழுவை, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின் மதுரை மண்டல கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு ரோந்து குழுவிற்கு புதிதாக இரு சக்கர வாகனம்,  24 மணி நேரமும் செயல்படும் புதிய அலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து வைத்தார்.

    ரேசன் பொருட்களை பதுக்கினாலோ அல்லது கடத்தினாலோ 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உள்ள 7418446469 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    Also see...நாமக்கல்லில் குழந்தைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

    மேலும்  தமிழக -  கேரள எல்லைப் பகுதிகளில் இதுவரை ரேஷன் பொருட்களை கடத்தியது தொடர்பாக 548 வழக்குகள் பதிந்து, 214 வாகனங்கள் பறிமுதல் செய்தும், 4,63,845 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    செய்தியாளர்: பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Ration Goods, Theni

    அடுத்த செய்தி