முகப்பு /செய்தி /தேனி / வீட்டில் பதுங்கிய கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

வீட்டில் பதுங்கிய கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கண்ணாடி விரியன் பாம்பு

கண்ணாடி விரியன் பாம்பு

Theni Snake Rescue : குடியிருப்பு பகுதிகளுக்குள் கொடிய விஷமுடைய பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி அருகே வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு. உயிருடன் பத்திரமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது ரெங்கநாதபுரம் கிராமம். அங்குள்ள மன்னவன் என்பவரது வீட்டில் இன்று பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டில் இருப்பவர்களை எச்சரித்து விட்டு   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.‌ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் இருந்த சுமார் 5அடி நீளமுடைய பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தனர்.‌

பத்திரமாக மீட்கப்பட்ட பாம்பு கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் ரக பாம்பு என தெரியவந்தது.  கண்ணாடி விரியன் பாம்பு அதிக ஆபத்தானது. இந்தப்பாம்பு ஒருவரை கடித்தால் அதன் விஷம் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தத்தை உறைய வைத்துவிடும் அளவுக்கு வீரியமானது. இந்த பாம்பு கடித்த நான்கு மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுக்காமல் இருந்தால் அடுத்த கட்டம் மரணம்தான்.

இதையடுத்து பிடிபட்ட கொடிய விஷமுடைய பாம்பை போடி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.   குடியிருப்பு பகுதிகளுக்குள் கொடிய விஷமுடைய பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பழனிக்குமார் (தேனி)

First published:

Tags: Local News, Snake, Tamil News, Theni