தேனி அருகே காணாமல் போனதாக சொல்லப்பட்ட பள்ளி மாணவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக. மது போதை தகராறில் சக நண்பர்களே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சிறுவன் கொல்லப்பட்டத்தின் பகீர் பின்னணி என்ன?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன். இவரது 16 வயது மகன் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
12ம் வகுப்பு செல்வதற்காக தேர்வு முடிவுக்கு காத்திருந்த அவர், கடந்த 18ஆம் தேதி திடீரென காணாமல் போனார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் காணாததால் உத்தமபாளையம் காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்திருந்தார்.
வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தநிலையில், கடந்த 20ம் தேதி வீட்டருகே பாழடைந்த கிணற்றில் சிறுவனின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்கையில், அது காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவன் எனத் தெரியவந்தது.
இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்தார். அதனடிப்படையில் சந்தேக வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் செல்போன் எண்ணில் கடைசியாக தொடர்பு கொண்டவர்களின் பட்டியல் அடிப்படையில் புலன் விசாரணை நடத்தினர்.
அதில் 17வயது சிறுவர்கள் இருவர் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் படி சிறுவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பிடிபட்டசிறுவர்கள், உயிரிழந்த சிறுவன், மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான அல்லா பிச்சை ஆகிய 4 பேரும் நண்பர்கள். கடந்த ஜூன் 18ஆம் தேதி மாலை மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது அங்கு வந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து உணவு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். கொடுத்த விட்ட பணத்திற்கு கணக்கு கேட்ட போது, சிறுவனுக்கு மற்ற மூவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. ஏற்கெனவே மதுபோதையில் இருந்த மூவரும் ஆத்திரத்தில் சிறுவனைத் தாக்கி கிணற்றில் வீசி கொலை செய்தததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து மதுரையில் தலைமறைவாக இருந்த அல்லா பிச்சையை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த உத்தமபாளையம் போலீசார் 2 சிறுவர்கள் உட்பட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அல்லா பிச்சையை தேனி மாவட்ட சிறையிலும், சிறுவர்கள் இருவரை மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்திலும் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theni