முகப்பு /செய்தி /தேனி / சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. உருவ பொம்மை எரிப்பு...!

சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. உருவ பொம்மை எரிப்பு...!

சீமானுக்கு எதிராக போராட்டம்

சீமானுக்கு எதிராக போராட்டம்

அருந்ததியர் சமூக மக்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

அருந்ததியர் இன மக்கள் தூய்மைப் பணிக்காக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாகத் தெரிகிறது. சீமானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு திருநகர் காலனியில் சீமானை கைது செய்ய வலியுறுத்தி ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு பழைய பூந்துறை சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினருக்கும் தமிழ்ப்புலிகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். வடமாநில இளைஞர்கள் குறித்து எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் இருவரும் பேசி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Protest, Seeman