ஹோம் /நியூஸ் /தேனி /

நாளைய முதல்வர் தளபதி விஜய்.. தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

நாளைய முதல்வர் தளபதி விஜய்.. தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனியில் நடிகர் விஜய்யின் 30 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை பாராட்டி ஒட்டப்பட்ட போஸ்டரில் நாளைய தமிழக முதல்வர் தளபதி விஜய் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை அவரது ரசிகர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தேனியில் அவரது ரசிகர்கள் விஜய்யை பாராட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தேனியில் ஒட்டப்படும் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதன் வரிசையில் தற்போது இந்த போஸ்டர்களும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேனியில் என்.ஆர்.டி. நகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய திரையுலக தளபதியே என்றும், நாளைய தமிழக முதல்வர் தளபதி விஜய் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

விஜய்யை நாளைய தமிழக முதலமைச்சராகவும், புஸ்ஸி ஆனந்தை நாளைய அமைச்சராகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்: பழனிக்குமார், தேனி.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Local News, Theni