ஹோம் /நியூஸ் /தேனி /

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்... சாலை மறியலில் ஈடுப்பட்ட பொற்றோரால் பரபரப்பு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்... சாலை மறியலில் ஈடுப்பட்ட பொற்றோரால் பரபரப்பு!

தேனி மாவட்டம் கம்பம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவ, மாணவியருடன் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

க.புதுப்பட்டியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பள்ளி தலைமை ஆசிரியரிடம்  விசாரணை நடத்தி தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய  நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Also see... ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி அலுவலருக்கு திமுக பிரமுகர் பகிங்கர மிரட்டல்

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் குற்றச்சாட்டு குறித்து உத்தமபாளையம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: பழனிக்குமார், தேனி

First published:

Tags: School students suicide, Sexual harassment, Theni